• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை..,

ByKalamegam Viswanathan

Sep 29, 2026

மதுரையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6:30 மணி முதல் 8 .30மணி வரை சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளான முள்ளி பள்ளம் தென்கரை மேலக்கால் திருவேடகம் தச்சம்பத்து தேனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீர்வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது மழை பெய்ய ஆரம்பித்தவுடன் பல்வேறு பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது. குறிப்பாக சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஜெனகை மாரியம்மன் கோவில் பெரிய கடை வீதி வட்ட பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சாலைகளில் குளம் போல் மழை நீர் தேங்கி நின்றது. சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் கழிவு நீரை வெளியேற்ற வடிகால் வசதி செய்யாத நிலையில் ஆங்காங்கே மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் ஓடியது இதனால் பொதுமக்கள் கழிவுநீர் கலந்த மழை நீரில் மூக்கை பொத்தி கொண்டு நடந்து சென்றனர்.

சோழவந்தான் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டுமென கடந்து சில வருடங்களாக பொதுமக்கள் கூறி வரும் நிலையில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால் அடிக்கடி கழிவுநீர் மழைநீருடன் கலந்து தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். கழிவுநீர் கலக்காதவாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் பொது மக்களை தொற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.