• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தங்க மோதிர திட்டம்..,

ByKalamegam Viswanathan

Sep 28, 2026

மாண்புமிகு தமிழக முதல்வர் , தாய்மையினையும், குழந்தை பிறப்பின் பெருமையையும் உணர்த்தவும், அரசு மருத்துவமனைகளில் நிகழும் குழந்தை பிறப்பை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர், மதுரையில் தொடங்கி வைத்தார்.
22.06.2026 அன்று 12.00 முற்பகல் (AM) முதல், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற, EKYC பதிவு பெற்ற ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆறு தமிழ்நாடு குடியிருப்பு அடையாளச் சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் ஒரு அடையாளச்சான்று பெற்ற தாய்மாராக இருக்க வேண்டும்.