• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மணியகாரன்பாளையம் அன்றும் இன்றும் வரலாற்று நூல் வெளியீடு..,

BySeenu

Sep 28, 2026

கணபதி மணியகாரன்பாளையம் பகுதியின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மு. கிருஷ்ணசாமி எழுதிய “கோவை – கணபதி மணியகாரன்பாளையம் அன்றும் இன்றும் (1800–2026)” என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா, கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு முருகேசன் தலைமை வகித்தார்.

நடராஜ் கவுண்டர், வேலுமணி நாயுடு, பழனிச்சாமிக்கவுண்டர், சண்முகசுந்தரம், முத்துசாமி உடையார், சண்முகசுந்தரம், ரகுபதி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சி. நடராஜ், ஆறுக்குட்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நூலாசிரியர் மு. கிருஷ்ணசாமி வரவேற்றுப் பேசினார்.

விழாவில் ஆடிட்டர் அர்ஜுனன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் நித்தியானந்தம், அறிவழகன் ஆகியோர் நூலின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நூல் மதிப்புரை நிகழ்ச்சியில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பி.ஏ. கல்விக் குழுமத் தலைவர் அப்புக்குட்டி, செல்வம் ஏஜென்சிஸ் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நூலின் சிறப்புகள் குறித்தும், மணியகாரன்பாளையம் பகுதியின் வளர்ச்சி குறித்தும் பேசினர்.

மேலும் மனிதநேயர் கோவை இரமேஷ், ,பிரபு, அரிமா சுப்பையன், அரிமா கமலாபிரஸ் ராஜு, வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சிவசாமி தமிழன், சிவஞானம், மனோகரன், ஜானகி சம்பத், சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக வித்வான் செல்வராஜ் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சியை நடராஜ் ஆசிரியர் தொகுத்து வழங்கினார். செல்வராஜ் நன்றியுரை கூறினார்.

1800-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான மணியகாரன்பாளையம் பகுதியின் வரலாற்றுச் சுவடுகள், பழமையான கோயில்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய இந்த நூல், அப்பகுதியின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய ஆவணமாக அமைந்துள்ளது.