மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்கம் சார்பில் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள எம் வி எம் மருது மஹாலில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமை சோழவந்தான் அரிமா சங்கம் மற்றும் தவம் மருத்துவமனை மேக்சி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தினர்.

முகாமிற்கு சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர் அரிமா சசிகுமார் முன்னிலை வகித்தார். இன்ஜினியர் அரிமா செல்ல பாண்டியன் துவக்கி வைத்தார்.

முகாமில் ரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை நோய் எச் பி ஏ1 சி சர்க்கரை அளவு பரிசோதனை எச்பி ரத்த அளவு பெண்களுக்கான பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் கண் பரிசோதனை கண் புரை நோயாளிகள் கண்நீர் அழுத்த நோய் குழந்தைகளின் கண் நோய் கிட்டப் பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்து போன்றவற்றிற்கு பரிசோதனைகள் நடைபெற்றது. மேலும் கண் கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு குறைந்த விலையில் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை

சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் மருதுபாண்டியன் தலைமையில் செயலாளர் ராசி கண்ணன் பொருளாளர் ஆனந்த் மற்றும் அரிமா நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் செய்தனர்.





