• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக் மீது லாரி மோதி விபத்து..!

ByP.Thangapandi

Sep 25, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணி சாலையைச் சேர்ந்தவர் சபரிமலை கண்ணன் (32).,

இவர் தேனி மாவட்டம் வைகை அணை அருகே உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.,

இவர் பணிமுடிந்து நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கனவாய் மலைக்கு கீழே உள்ள ஸ்ரீரங்கபுரம் விலக்கு அருகே வந்த போது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டு தூக்கி வீசப்பட்டது.,

தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சபரிமலை கண்ணன்-யை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.,

சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,

இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,