• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

“சைக்கிள் ஓட்டிய போது திடீரென வந்த பாம்பு”..!

BySeenu

Sep 24, 2026

​கோவை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது, திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்துத் தாவி குதித்து ஓடிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ். (SIHS) காலனி இந்திரா நகர் பகுதியில் நேற்று மாலை சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை ஓட்டிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஓரத்தில் இருந்து திடீரெனப் பாம்பு ஒன்று அதிவேகமாகச் சைக்கிளுக்குக் குறுக்கே கடக்க முயன்றது.
​கண் இமைக்கும் நேரத்தில் பாம்பு குறுக்கே வந்ததைச் சற்றும் எதிர்பாராத அந்தச் சிறுவன், பேரதிர்ச்சி அடைந்து அலறியபடியே ஓடும் சைக்கிளிலிருந்து சட்டென்று கீழே தாவி குதித்து ஓடித் தப்பினான்.
​
சிறுவன் கீழே குதித்த வேகத்தில் சைக்கிளின் முன்புறச் சக்கரம் பாம்பின் உடலின் மீது ஏறி இறங்கியது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாகப் பாம்பிற்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல், அது வந்த வழியே வேகமாக அருகில் இருந்த புதருக்குள்ச் சென்று மறைந்தது. சிறுவனும் எவ்விதக் காயமுமின்றித் தப்பினான்.
​அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த அதிர்ச்சி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில தெருக்களில் ஆள்நடமாட்டம் குறைந்த காலியிடங்களில் புதர்கள் அடர்ந்து மண்டி கிடக்கின்றன. இதனால் பாம்பு, அரணை உள்ளிட்ட விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றின் புழக்கம் அப்பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது.
​

குறிப்பாகத் தற்போது மழைக்காலம் என்பதால் புதர்களில் இருக்கும் பாம்புகள் வெளியேறி, குடியிருப்புகள் மற்றும் சாலைகளுக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அப்பகுதியில் மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்றித் தூய்மைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.