விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரிஜினல் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் இயந்திரங்களைக் கொண்டு தீப்பெட்டி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் வழக்கம் போல தொழிலாளர்கள் தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீப்பொறி பரவி தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென பரவிய தீ இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள் தயார் செய்யப்பட்ட பொருட்கள் என அனைத்திலும் பரவியது.
இதனால் அந்தப் பகுதியை புகை மண்டலமாக காட்சியளித்தது.
உடனடியாக தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீப்பெட்டி ஆளை முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
எனினும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து பலதரப்பட்ட இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் எறிந்து தீயில் கருகியது சுமார் மூன்று லட்ச ரூபாய்க்கு மேலான பொருட்கள் தீயில் சேதமானதாக கூறப்படுகிறது.

எனினும் பணியாளர்கள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் யாருக்கும் எந்த விதமான காயமோ உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




