மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகை தந்து துவக்கி வைக்க உள்ளார்.,

இந்நிலையில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வருகை தந்து சில பயனாளிகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத்தை வழங்க உள்ள சூழலில்.,

இன்று உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வர்ணம் பூசும் பணி, பராமரிப்பு பணிகள் மற்றும் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் வேலை ஆட்களை கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.,
தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மருத்துவத் துறையினர், உசிலம்பட்டி எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட பலரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.,

இதனால் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது.,



