தமிழகத்தில் ஒரே நாளிலே 253 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு, அதோடு, மதுரையில் 3 கொலைகளை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரத்திலே 8 பேர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கண்டு மக்கள் அச்சத்திலே உறைந்து போயிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் சூடு குடித்திருக்கும் பிரதமர் வேட்பாளர் பஞ்சாயத்தாகும்.பிரதமர் வேட்பாளர் விஜய்யா அல்லது ராகுல் காந்தியா, என தவெகவுக்கும் காங்கிரஸுக்கும் மோதிக்கொள்கின்ற குத்துச்சண்டை போட்டி, டெங்கு காய்ச்சல் பரபரப்பை விட, சட்டம் ஒழுங்கு கொலை சம்பவத்தை விட அதிகமான பரபரப்பை உண்டாக்கி வருகிறது.
ஒருவேளை இதை மடைமாற்றம் செய்வதற்காக தவெக திட்டமிட்டு பரப்பி வருகிறார்களோ என்னவோ தெரியவில்லை.
சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக காங்கிரஸ் தேர்தல் முடிந்த ஈரம் காய்வதற்குள்ளாக, தவெக பக்கம் சென்று ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கின்ற வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றார்கள்.
ஏற்கனவே அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணிதான் பாராளுமன்றத் தேர்தலில் ஆளுகிற பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேர்தல் வியூகத்தை வகுத்து, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. ஆனால் தற்போது புதிய குழப்பமாக தமிழகத்திலே தவெக தலைமையில் மத சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் புது கூட்டணி அமைத்து, புது குழப்பத்தை இப்போது உருவாக்கி இருக்கின்றார்கள்.

இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல்,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜயை பிரதமர் வேட்பாளராக தவெக முன்னிறுத்தி வருகின்ற வேளையில் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி முன்னிறுப்படுத்தி, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறிய நிலையில் தவெக பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு காங்கிரஸ் கட்சியில் கடும் அதிர்ச்சியை, அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதை நாம் பார்க்கிறோம்.
இந்த சூழ்நிலையில் 2029 ஆண்டில் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தான் முன்னிலைப்படுத்தப்படுவார், இதை தவெக ஏற்கவில்லை என்றால், தவெகஅமைச்சரவையிலிருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று பொது மேடையிலே கொந்தளித்தார் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் . இன்றைக்கு இருக்கிற இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சனை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாதவர்களோடு கூட்டணி தொடர வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்.
ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான பிரவீண் சக்கரவர்த்தி, தவெக தயவில் தற்போதும் மேல்சபை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுகின்ற விசுவாசத்தை வெளிப்படையாக காட்டும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகையை யார் அவர்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியது, இன்றைக்கு புதிய சர்ச்சையை சச்சரவை உருவாக்கி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் இரு தரப்புக்கும் இடையே புகைந்து கொண்டிருக்கிற நெருப்பு தற்போது பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. விஜய் தலைமையிலான மத சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தொடங்கிய நிலையிலே உடையும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஆதரவு தருகிற வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட் நேற்றைய தினம் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் பாரத பிரதமராக தென்தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் ஏன் வரக்கூடாது என்று இதையெல்லாம் கொளுத்திப் போட்டது முதன்முதலாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
இன்றைக்கு இடைத்தேர்தலில் மதுராந்தகம் தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய பேச்சு, ஆதவ் அர்ஜுனாவின் ஆணவத்தின் அகம்பாவத்தின், அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக இருக்கிறது. இன்றைக்கு பொது வாழ்க்கையில் துளியும் சம்பந்தம் இல்லாத ,பொது வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாத, பொது வாழ்க்கைக்கு எந்த தகுதியும் தராதரம் இல்லாத ,லாட்டரி குடும்பத்தில் பெண் எடுத்த பெயரில் அரசியல்வாதிகளோடு அறிமுகமாகி, தன்னுடைய அரசியல் பிரதேசத்தை அரங்கேற்றம் செய்து, அதிர்ஷ்டத்தால் இன்றைக்கு அமைச்சராகி இருக்கிறார்.
இந்த அமைச்சர் பதவி நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு, நரம்பில்லாத நாக்கிலே வாய்க்கு வந்ததை எல்லாம் அதிமேதாவி ஆதவ் அர்ஜுனா உளறுகின்ற அந்த ஆணவ பேச்சு, அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக இருக்கிறது.அவருடைய அரசியல் பயணம் என்ன, இன்றைக்கு எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட்டு இருந்தால், எடப்பாடியார் வெற்றி வாய்ப்பு இழந்திருப்பார் என்று கூறுகிறார்.

இந்த முட்டாள் அமைச்சரை வைத்துக்கொண்டு, எப்படி விஜய் தவெக கட்சியை வழிநடத்தப் போகிறார் என்று தெரியவில்லை.. தமிழ்நாட்டில் நின்ற வேட்பாளர்களில் 234 சட்டமன்றத் தொகுதியிலே 98,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடியார். அதுமட்டுமல்ல, அவரோடு சேர்ந்து தவெக போட்டியிட்ட ஏழு சட்டமன்ற உறுப்பினர்களை அண்ணா திமுகவில் வெற்றி பெற்று, தமிழகத்தில் 47 இடங்களில் தவெக போட்டியிட்ட தொகுதிகளில் தான் அண்ணா திமுக வெற்றி பெற்றது என்கிற அடிப்படை அறிவும், அடிப்படை உண்மை கூட தெரியாத இந்த அரவேக்காட்டுத்தனமான அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடைய பேச்சை நாம் என்ன சொல்வது?
அவருடைய அரசியல் பயணம் அப்படி, முதல் முதலில் திமுகவிலே அரசியல் பாலபாடம் படித்து, அங்கே கூஜா தூக்கிக் கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா, தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்ற போது, அங்கே திமுகவிலிருந்து விரட்டப்பட்டு, திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதால், திமுகவை காட்டிக் கொடுக்கவும் துணிந்தவர்தான் இந்த ஆதவ் அர்ஜுனா என்பதை விஜய் சற்று எச்சரிக்கையாக ஆதவ் அர்ஜுனாவிடம் இருக்க வேண்டும்.
திமுகவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளன் காலை பிடித்து, கையைப் பிடித்து, விசிகவில் தன்னை இணைத்துக் கொண்டு, மாநாடுகளை நடத்திக் காட்டுகிறேன் என்று அங்கே பெருமை பேசி, கடைசியில் விசிகவே கைப்பற்ற நினைத்த அந்த ரகசியத் திட்டத்தை அறிந்த பிறகு, அங்கே இருக்கிற விசிக விசுவாசத் தொண்டர்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் எனக்கு துணை பொதுச்செயலாளர் வழங்கினால், நான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைத்துக் கொள்கிறேன் என்று சொன்னபோது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், இங்கே பதவி விற்பனைக்கு அல்ல, உழைப்பவர்களுக்குத்தான் பதவி உண்மையான விசுவாசத் தொண்டர்களுக்குத்தான் பதவி என்று அரசியல் இலக்கணத்தை கற்றுக் கொடுத்தார் எடப்பாடியார் அவர்கள்,
அதற்குப் பிறகு விஜய்யிடம் அடைக்கலமாகி, இன்றைக்கு அதிர்ஷ்டத்தால் அமைச்சராகி, வாய்க்கு வந்ததை எல்லாம் ஏதோ இவர்தான் இந்த இந்திய திருநாட்டுக்கே சுதந்திரம் பெற்றுத்தந்த தியாகியின் குடும்பத்தைச் சேர்ந்தவரைப் போல, அவருடைய பேச்சும், அவருடைய ஆணவமும், அவருடைய உடல்மொழியும் அவருடைய தமிழ் மொழியும் பார்க்க சகிக்க முடியவில்லை என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள்.
தவெக கட்சியை உயர்த்திப் பிடிப்பதிலே யாருக்கும் வருத்தமில்லை. நீங்கள் தவெக கட்சியை உயர்த்திப் பிடித்து, தவெகவை கையில் நீங்கள் எடுப்பதற்கும் ரகசிய திட்டம் வைத்திருப்பதையும் விஜயும் அறிவாரா, நாட்டு மக்களும் அறிவார்கள்.
விஜய் இப்போது உங்களை விரட்டிவிட்டால், நீங்கள் நடுத்தெருவிலே தான் நிற்க வேண்டும். உங்களுக்கென்று அரசியல் முகவரி கிடையாது. அரசியல் அனுபவம் கிடையாது. அணுகுமுறை கிடையாது. உங்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே, விஜயின் தயவால், அதிர்ஷ்டத்தால், அமைச்சராகிவிட்டு, ஆணவத்தால் நீங்கள் தலைகால் புரியாமல் ஆடும் ஆட்டத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, இப்போது தவெகவில் நீங்கள் நிறுத்தி இருக்கிற இரண்டு வேட்பாளர்கள் யார்? தவெக கட்சியை உருவாக்கிய தியாகிகளா? அல்லது தவெக உருவாவதற்கு விஜய் மன்றத்திலிருந்து உழைத்த உத்தமர்களா? அல்லது விஜய் அரசியல் பிரவேசம் செய்வதற்கு முன்பாக மன்றத்திலே இருந்து நலத்தட்டப் பணிகள் செய்தவர்களா? அவர்கள் நலத்திட்ட பணிகள் செய்பவர்கள் அல்ல. அவர்கள் அரசியல் பிணிகள். ஆகவே, அந்த அரசியல் பிணிகள் தவெகவை பிடித்திருக்கிறது.

இன்றைக்கு 10 நாட்கள் கூட வெற்றி பெற்று ஆகவில்லை. மக்களை சந்திக்கவில்லை. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.
ஆனால் இன்றைக்கு மக்களிடத்தில் விரட்டி அடிக்கப்படுகிற காட்சியை நாம் பார்க்கிறோம். ஆகவே, தமிழக மக்களை நீங்கள் குறைத்து மதிப்பிட்டு இருக்கிறீர்கள். அவர்களை சரியாக நீங்கள் எடை போடவில்லை. தமிழக மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள், தன்மானம் மிக்கவர்கள்.
ஆகவே, உங்களுக்கு இந்த தாராபுரத்திலும் ,மதுராந்தகத்திலும் கொடுக்கப்போகிற அரசியல் பாடம்தான் உங்களுடைய அராஜக ஆட்டத்திற்கு அதிரடி அரசியல் ஆட்டத்திற்கும் ,குதிரை பேர துரோக அரசியல் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிற தீர்ப்பாக மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் கணிதா சம்பத் அவர்களும், பானுமதி அவர்களும் எடப்பாடியார் அவர்களுடைய தேர்தல் வியூகத்தில் மக்கள் நல்ல தீர்ப்பை இரட்டை இலைக்கு வழங்கி இருக்கிறார்கள்.
ஆகவே, இரட்டை இலை மீண்டும் தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் மலரும். அப்போதுதான் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் அருமை புரியும். அருமை தெரியும். அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
தப்பு கணக்கு போட்டுவிட்டு தவெக கட்சி களத்தில் நிற்கிறது. உங்கள் கணக்கு தப்பு கணக்கு. எடப்பாடியார் போடுகிற கணக்கு தான் நியாயக் கணக்கு, தர்மக் கணக்கு, சத்தியக் கணக்கு, உண்மை கணக்கு. உண்மை கணக்கு உலகறியச் செய்கிற தீர்ப்பை தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள்.
பொறுத்திருந்து பாருங்கள் ஆதவ் அர்ஜுனா உங்களுக்கு தெரியும். மக்கள் சக்தி என்றால் என்ன? மக்கள் சேவை என்றால் என்ன? மக்கள் தீர்ப்பு என்றால் என்ன? மக்கள் தொண்டு என்றால் என்ன? ஆகவே, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று இரட்டை இலை வெற்றிவாகை சூடும். அப்போது ஆதவ் அர்ஜுனா எங்கே போவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.



