• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மாற்றம்..,

ByKalamegam Viswanathan

Sep 19, 2026

மதுரை எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி – இயக்குனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எய்ம்ஸ் நிறுவனத்தின் நிறுவன நிதிக் குழு பட்டியலிலும் இவர் நிர்வாக இயக்குனர் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டாக்டர் விர் சிங் நேகி ஏற்கனவே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார்.

ஒரே நேரத்தில் ஜிப்மர் இயக்குநர் பொறுப்பிலும், மதுரை எய்ம்ஸ் நிர்வாகத் தலைமையிலும் அவர் இடம்பெற்றிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.

இது கூடுதல் பொறுப்பா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் அனுமந்த ராவ் பதவி வகித்தார் தற்போது புதிய இயக்குநர் டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் விடுதி, உணவு கூடம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மருத்துவமனை கட்டுமானம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட பணிகள் 35 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 59 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

வரும் 2027 ஜனவரி 1 ஆம் தேதி முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு பயன்பாட்டுக்கு வரும் தகவல் வெளியாகியுள்ள நிலையில்.,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பேசு பொருளாகி வருகிறது.