மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் 407 சரக்கு வாகனம் மதுரையில் இருந்து தேனிக்கு உரக்கடைக்கு தேவையான மருந்து உபகரண பொருட்களை ஏற்றி சென்ற நிலையில் வாகனம் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து.,

இந்த நிலையில் செட்டியபட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையில் மோதி அருகிலுள்ள இருசக்கர வாகனம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதி வாகனத்தின் முன் பகுதி பலத்த சேதத்தால் தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த செந்தில் என்ற ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலியானது சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,

இதில் கடை மற்றும் அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.,
தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் தாலுகா போலீசார் வாகனத்தில் சிக்கிய வரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,








