மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு
பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர் கதையாக உள்ளது.
காலை, மதியம், இரவு என்று நேரம் காலம் இன்றி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் வாடிப்பட்டியின் பல்வேறு பகுதிகளிலும் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதிகளிலும் மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்களின் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக இன்று சுபமுகூர்த்த தினம், மற்றும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இது போன்ற மின்தடையால் பல்வேறு பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக வணிகர்கள் மின்தடையால் வியாபாரம் பாதிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

தமிழக அளவில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வாடிப்பட்டி சோழவந்தான் கருப்பட்டி இரும்பாடி அய்யங்கோட்டை சித்தாலங்குடி மேலக் கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினசரி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








