• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நடிகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Dec 29, 2021

தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆர். சுந்தர்ராஜன் .இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தார்.இவரது திரை வாழ்க்கை 1977ல் ‘அன்று சிந்திய ரத்தம்’ என்னும் படத்தில் துவங்கி பயணங்கள் முடிவதில்லை,சுகமான ராகங்கள், அம்மன் கோயில் கிழக்காலே போன்ற வெற்றி படங்களில் இயக்குனராக பணிப்புரிந்து வெற்றி கண்டவர்.இயக்குனராக மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் தன் நடிப்பை பல வேடங்களில் நிருபித்துள்ளார் சுந்தர்ராஜன்.இவரது நகைச்சுவை படங்கள் இன்றும் பலராலும் பேசப்படுகிறது.இத்தனை பெருமைக்குரிய நடிகர் ஆர். சுந்தர்ராஜன் பிறந்த தினம் இன்று..!