மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.கொக்குளம் ஊராட்சி, செக்கானூரணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலதன மானிய நிதித் திட்டத்தின் (SCPAR 2024-2025) கீழ், ரூ.816.48 லட்சம் (ரூ.8.16 கோடி) மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீனப் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இப்பேருந்து நிலையத்தில் இரண்டு பிரிவுகளாக (Block-1 & Block-2) கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 27 வணிகக் கடைகள், 2 உணவகங்கள், புறக்காவல் நிலையம், அலுவலக அறை, நவீனப் பயணிகள் காத்திருப்பு அறைகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் தளம் (CC Road) உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரவுள்ள இப்பேருந்து நிலையத்தை எப்போதும் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், எஞ்சியுள்ள சிறு பணிகளையும் விரைந்து முடித்து முழுமையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.ச.சதீஷ்பாபு,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.








