மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹரத்தில் 15 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பக்த சபா சார்பாக ஸ்ரீ ராதாகிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி காலை 7 மணிக்கு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நாம பாராயணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு அஷ்டபதி பஜனை நடைபெற்றது இரவு 8 மணிக்கு தியானம் குரு கீர்த்தனைகள் டோலோத்ஸவம் நடைபெற்றது. இரண்டாம் நாள் 6ம் தேதி காலை 7 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை சீர் கொண்டு வருதல் நடைபெற்று காலை 9 மணிக்கு மேல் ராதா கல்யாண மஹாத்ஸவம் ஆஞ்சநேய உற்சவம் நடைபெற்று மங்களஹாரத்தி பாடப்பட்டது. மதுரை ஸ்ரீ பத்மாலயா பஜனை குழுவினர்கள் மற்றும் வைகாசி விசாக விழா கமிட்டி குழுவினர்கள் பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடினார்கள்.
ராதா கல்யாணத்தை முன்னிட்டு சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் அன்னதானம் நடைபெற்றது. ராதா கல்யாண ஏற்பாடுகளை ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பக்த மகளிர் சபா மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

ராதா கல்யாணத்தில் கலந்து கொண்ட நன்கொடையாளர்கள் எம் வி எம் மணி முத்தையா வள்ளி மயில் அரிமா சங்க தலைவர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் ஆகியோருக்கு விழா கமிட்டி சார்பாக மரியாதை செய்யப்பட்டது.








