• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

காமன்மேன் ஆக மாறிய காதல் காவலர் சசிக்குமார்

நடிகர் கிருஷ்ணாவுக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் ‘கழுகு.’ இந்தப் படத்தின் திரைக்கதை வடிவம், விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது இந்தப் படத்தின் வெற்றி, படத்தின் இயக்குநர் சத்யசிவாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
தற்போது இயக்குநர் சத்யசிவா நடிகர் சசிகுமாரை ஹீரோவாக வைத்து ‘காமன்மேன்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.


இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், டீசரும் சமீபத்தில் வெளியாகின.டீசரில் சசிகுமாரின் கெட்டப்பும் சண்டைக் காட்சிகளும் கவனம் ஈர்த்தன. எப்போதும் குடும்பப்பாங்கான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் சசிகுமார் இந்த முறை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லரில் இறங்கியிருப்பது தெரிய வருகிறது. சசிகுமாரின் 21-வது படமான இதில் கன்னட நடிகை ஹரிப்ரியா நடித்திருக்கிறார். தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இது. படத்துக்கான இசையை ஜிப்ரான் அமைத்திருக்கிறார்.

படம் குறித்தும், சசிகுமாரின் கதாபாத்திரம் குறித்தும் பேசுகிறார் இயக்குநர் சத்யசிவா.
இதுவரைக்கும் சசிகுமார் சார் வில்லேஜ் சப்ஜெக்ட் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார். ‘காமன்மேன்’ படம் சசிகுமாருக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுக்கும்.

காமன்மேன் ஒருவரைப் பற்றிய கதை. எதார்த்தமான கதையா சசிகுமாருக்கு இருக்கும். படத்தோட கதை எழுதி முடிச்ச உடனே தயாரிப்பாளர் கிட்ட சசிகுமார்தான் இந்த கேரக்டருக்கு சரியா இருப்பார்னு சொல்லி கால்ஷீட் வாங்கிப் படம் பண்ணினேன். படத்தோட நெகட்டிவ் கேரக்டர்ல விக்ராந்த் நடித்திருக்கார்” என்றார்.