• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை ஐ. பெரியசாமி பேட்டி..,

Byp Kumar

Sep 6, 2026

திண்டுக்கல்லில் திமுக கிழக்கு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று05.09.26 மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஆன ஐ பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய குறித்த கேள்விக்கு,

அரசாங்கம் அவர்கள் கையில் உள்ளது திமுக 75 ஆண்டுகள் இயக்கம் எத்தனையோ சோதனைகளை சந்தித்த இயக்கம் திமுகவிற்கு இதுவெல்லாம் ஒரு சாதாரண விஷயம் என்னவெல்லாம் வழக்கு போடட்டும் நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி பெறுவதில் உறுதியாக உள்ளோம்.

தவெக கூட்டணி கட்சியினரை அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசி வருவது குறித்த கேள்விக்கு,

இடதுசாரிகள் கூட்டணியில் இடம்பெறவில்லை அவர்கள் வெளியில் இருந்து தான் ஆதரவு தருகின்றனர் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்பது அவர்களது கொள்கை

தமிழக முதலமைச்சர் இதுவரை எதற்குமே வாய் திறந்தது கிடையாது பிஜேபியை பற்றியும் வாய் திறந்தது கிடையாது கல்விக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்காமல் உள்ளது. திமுக ஆட்சியில் 3000 கோடி நிலுவையில் உள்ளது அது இதுவரை தரவில்லை மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி தருவோம் என மத்திய அரசு கூறியது. ஆனால் தவெக அரசு மும்மொழி கொள்கையை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை தாய் மொழி தமிழ் தான் இருக்க வேண்டும் இந்தி தமிழகத்திற்குள் வரக்கூடாது ஆங்கிலம் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் மூன்றாவது மொழி நமக்கு அவசியம் கிடையாது.

“தமிழக அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என கூறி வருவது குறித்த கேள்விக்கு,

தமிழக முதல்வர் மொத்தத்திற்கு மௌனமாக இருந்து வருகிறார் ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு வார்த்தை சொல்லி விடுகிறார். இது அரசியலுக்கு சரியாக வராது அரசியல் ஜனநாயகத்தில் எல்லா கருத்திற்கும் மதிப்பளித்து பதில் அளிக்க வேண்டும் தமிழ்நாடு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய வகையில் முதலமைச்சரின் செயல்பாடு இருக்க வேண்டும் அமைதியாக இருக்கிறார் சட்ட சட்டசபையில் வாதங்கள் வருகிற போது திருப்பி பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை மற்ற அமைச்சர்களை பேசுங்கள் என்று சொல்கிறார் அவர்கள் பேசுகிறார்கள் முதலமைச்சர் பதிலாக நாங்கள் பேசுகிறோம் என்று அவர்கள் பேசுகிறார்கள் கூட்டுப் பொறுப்பு எனக் கூறுகிறார்கள் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு தான் அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் கிடையாது அதில் யார் வேணாலும் பதில் சொல்லலாம் அதுவே தொடர்ச்சியாக இருக்கக் கூடாது அது ஜனநாயகத்திற்கு அழகல்ல மக்கள் எந்த நம்பிக்கை வைத்து 3 நாள் செய்து வாக்களித்தார்கள்.

தேர்தல் கொடுத்து வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற வில்லை. அதனை நிறைவேற்ற எந்த முயற்சி எடுப்பது போல் தெரியவில்லை.

நிதித்துறைச் செயலாளர் கடன் வாங்கி தான் ஆட்சி நடத்த வேண்டும் என கூறுகிறார் சாதாரண தூய்மைப்பணி பணியாளர்கள் போராடினால் நாங்கள் கடன் வாங்கி தான் உங்கள் கொடுக்க வேண்டும் என கூறுகிறார்கள் எப்படி கொடுக்கிறோம் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை எப்படி தொழிலாளர் பிரச்சினை தீர்க்கிறோம் என்பதற்குத்தான் அரசாங்கம்.

அமைச்சர்கள் கூறுகிறார்கள் நாங்கள் உங்களுடன் வந்து போராடுகிறோம் எனக் கூறி நடிக்கின்றனர் இது என்ன சினிமாவா நடிப்பதற்கு ரிலீஸ் போன்று உள்ளது.

எதிர்க்கட்சிகள் மீது ஆளும் கட்சியினர் குற்றச்சாட்டு சொல்கின்ற போது சட்டமன்ற விதிமுறைகளின்படி பதில் சொல்லக்கூடிய உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது அதை மறுக்க முடியாது.

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் கொள்கை முரண்பாடாக உள்ளது இந்தக் கூட்டணி ஐந்தாண்டுகள் நீடிக்குமா என்பது குறித்த கேள்விக்கு,

முரண்பாடான கூட்டணி தான் சந்தர்ப்பத்திற்காக இந்த கூட்டணி அமைந்துள்ளது ஒரு காரணத்தை சொல்லி போய் உள்ளனர்.

எப்பொழுதுமே லட்சியம் கொள்கையில் ஒருமித்த கருத்துக்கள் உள்ளது தான் கூட்டணியாக இருக்க முடியும் அவர்கள் சொல்வதற்கெல்லாம் வளைந்து கொடுத்து போவது என்பது சரியாக வராது.

தொழிற்சங்க கொள்கைகளை நீங்கள் ஆக்கிரமிப்பு செய்ய செய்தீர்கள் என்றால் அவர்கள் வெளியேறி சென்று விடுவார்கள் அதுதான் நடக்கும்.