• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரைமேற்கு மண்டல அலுவலகத்தில் கவுன்சிலர்களின் குழு கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Sep 4, 2026

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில்
கவுன்சிலர்களின் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி ஆணையாளர் குமரன் தலைமை தாங்கினார் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், சுகாதார

ஆய்வாளர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றகூட்டம் 10.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது அதிகாரிகள் வந்த நிலையில் 11 மணி வரை கவுன்சிலர்கள்7 பேர் மட்டும் பங்கேற்றனர். மொத்தம் கவுன்சிலர்கள் 21 பேரில்கூட்டம் நடத்திட குறைந்தபட்சம் 8 பேர் இருக்க வேண்டும். அதனால் கூட்டம் நடத்த முடியுமா? என்று கேள்வி எழுந்தது இதனையடுத்து அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர்.

இதனையடுத்து 11.15 மணிக்கு ஒரு கவுன்சிலர் வந்தார். இதனை தொடர்ந்து கூட்டம் தொடங்கியது அடுத்தடுத்து சில நிமிடங்களில் 2கவுன்சிலர்கள் வந்தனர் 21 பேரில் 10 பேர் மட்டும் பங்கேற்றனர். 11 பேர் கலந்து கொள்ளவில்லை இந்த நிலையிலும் நடந்த கூட்டத்தில் 106 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி வேண்டும்மன்றகூட்டத்தில் தங்களது வார்டுகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினார்கள் அதன் விபரம் வருமாறு
சிவசக்திரமேஷ் (தி.மு.க ) மதுரை மாநகராட்சி 97-வது வார்டான என் வார்டில் தான் 24 மணி நேரம்அரசு மருத்துவமனை அமைந்து உள்ளது.கடந்த பல நாட்களாக தொடர்ந்து மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருவதால்பிரசவத்திற்காகவரக்கூடிய கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகள் மற்றும் நோயாளிகள்மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனை உள்ள பகுதிஎன்பதை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் மின்வெட்டுஇல்லாமல் ஆக்க வேண்டும் மேலும் அவசியம் கருதிமருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப ஜெனரேட்டர் வசதி செய்யப்பட வேண்டும் அதைமாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

எம்.பி.ஆர்.ரவிச்சந்திரன் (தி.மு.க.)
மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று கடந்தநான்கு ஆண்டுகளுக்கு முன்பே மன்றத்தின் முதல் கூட்டத்திலேயேபேசினோம் ஆனால் நடவடிக்கை இல்லை
கிருஷ்ணாபுரம்,குறிஞ்சிநகர் 8-வது தெருவில்அதிக பணியாளர்களைக் கொண்டு பாதாள சாக்கடைஅமைக்கப்பட வேண்டும் 92 வார்டில் ஒரு தார்ரோடு கூட போடவில்லை எங்களது பதவி காலத்திற்குள்ளாவதுசீக்கிரம் போடுங்கள்

உதவி ஆணையர் :
கடந்த ஆறு மாதமாக செயல் இல்லாமல் இருந்தது
தற்போது ஒரு வார்டுக்குரூ.25 லட்சம்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
சுதன் (தி.மு.க.) பழங்காநத்தத்தில் கழிவு நீர் நீரேற்று நிலையமானதுபல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். தற்போது பழுதாகி விட்டது. ஆகவேபுதியதாக நீரேற்று நிலையம் அமைக்கப்பட வேண்டும். அதுவரைபழுதான நிலையத்தை சரி செய்ய வேண்டும் பழுதானஆரம்ப சுகாதார நிலையத்தை சரி செய்துமகப்பேறு நிலையமாக மாற்ற வேண்டும்.

காதில் ரத்தம் வருது போஸ் (காங்கிரஸ்) 71 வது வார்டான என் வார்டில்265 தெருகள் உள்ளது அதில் 150 முதல் 250 ரோடுகள் போட்டாச்சு ஆனால் நிறைவு இல்லை. ஏனென்றால் 2 தெருகளுக்கு ரோடுபோடாததால் சந்து பொந்துகளுக்கு எல்லாம்ரோடு போட்டீங்க ஆனா எங்க தெருவுக்கு ரோடு போடல என்று கூறி காதில் ரத்தம் வரமாதிரி திட்டுறாங்க பதவிகாலம் 5 மாதம் தான் இருக்கிறது அதற்குள் ரோடு போட்டுவீங்களா?
கருப்பசாமி (தி.மு.க.) ‘முத்துலட்சுமி (ம.தி.மு.க.) உள்பட சிலர்பேசினார்கள்
பாக்ஸ் செய்தி

ஒருஆண்டுக்குப் பிறகு நடந்த மன்ற கூட்டம்
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலமாக பிரிக்கப்பட்டது அதில்திருப்பரங்குன்றத்தை மையமாக கொண்டு 21 வார்டுகள் சார்ந்து 5-வது மண்டலமாக புதியதாகமதுரை மேற்கு மண்டலம்செயல்பட்டு வருகிறது கடந்த 3ஆண்டுகளுக்கு மேலாக
மண்டலத் தலைவர் இருந்து வந்த போது ஒவ்வொரு மாதமும் மன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்ததுசமீபத்தில் மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்களும்பதவி ராஜினாமாசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்தசெப்டம்பர் மாதம் 22-ந் தேதி (22-9-2025ல் )மன்ற கூட்டம் நடந்தது இதனை தொடர்ந்து ஒரு ஆண்டிற்கு பிறகு (17 நாட்கள் உள்ள நிலையில்) நேற்றுகூட்டம் நடந்தது அந்த கூட்டத்திலும் 11 பேர்பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது