• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்..,

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவுபடி
மாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் ஆலோசனையின் படி
வட்டார மருத்துவ அலுவலர் அஸ்வி னி வழிகாட்டுதலில் படி வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு தீவிரப் பணிகள் செய்யப்பட்டது.

இதில் டெங்கு காய்ச்சல்,சிக்குன் குன்யா, மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் வளர ஏதுவாக உள்ள பயன்பாடற்ற தேங்காய் சிரட்டை, ஆட்டு உரல், மோட்டார் சைக்கிள், கார் டயர்களை சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது.

இந்த பணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சிவசங்கர்,, டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.