• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 1, 2026

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட துப்புரவு பணிக்காக மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்த ராமன் கோ நிறுவனத்தில் தூய்மை பணியாளர்கள் சுமார் 96 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 60 நபர்கள் மட்டுமே வேலை செய்து வருகிறார்கள்.

அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலி ழ483 ரூபாய் வழங்கப்பட வேண்டும் அதில் ஈ எஸ் ஐ 16 ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டும். இபிஎப் 63 ரூபாய் பிடித்தம் செய்து உரிய தலைப்பில் செலுத்தப்பட்டு அவர்களுக்கு அந்த ஆவணங்களை கொடுக்க வேண்டும். என்ற ஒப்பந்த விதிகளுக்கு மாறாக பிடித்த மேற்படி பணத்தை உரிய தலைப்பில் உரிய அலுவலகங்களுக்கு செலுத்தாமல் செயல்பட்டு வந்த ராமன் கோ நிறுவனத்தை கண்டுகொள்ளாமல் சின்னமனூர் நகராட்சியில் உள்ள ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பண பட்டுவாடா செய்து வந்த நிலையில் இதைக் கண்டித்து கடந்த இந்திய குடியரசு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக கடந்த 27/08/2026 ஆம் தேதி முதல் 31/08/2026 ஆம் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வந்த நிலையில் கம்பம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை செய்து உடனடியாக அங்கு உள்ள அலுவலர்களையும் சந்தித்து நடந்த விவரங்கள் குறித்து கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மாண்புமிகு முதல்வர் இடத்திலும் தெரிவித்து சட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக கூறி சென்று விட்டார்.

பின்பு நகர் மன்ற தலைவர் திருமதி அய்யம்மாள் அவருடைய மகன் முத்துக்குமார் அமைதியான முறையில் சட்டத்துக்கு உட்பட்டு அறவழியில் போராட்டம் நடத்தி நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு வைத்துக் கொண்டிருந்தபோது போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடத்துக்கு வந்து இடையூறு செய்து அடியாள்களை வைத்து மிரட்டி சங்க நிர்வாகிகளை தர குறைவாக பேசி போராட்டத்தை நடத்த விடாமல் இடையூர் செய்து மிரட்டி வந்தார்.

உடனடியாக சங்க பிரதிநிதிகள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இடத்திலும் காவல் கண்காணிப்பாளர் இடத்திலும் தொலைபேசியின் வாயிலாக புகார் செய்ததன் அடிப்படையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அவர்கள் உடனடியாக போராட்டக் களத்திற்கு வந்து அங்குள்ள அதிகாரிகளை வரவைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியதில் ராமன் கோ கம்பெனி கடந்த மூன்று வருடங்களாக ஒப்பந்த விதிகளுக்கு மாறாக பணம் பெற்றுச்சென்றது தெரியவந்தது.

மட்டுமல்லாமல் அங்குள்ள பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் இடத்தில் தினசரி நாள் ஒன்றுக்கு இபிஎப் 63 ரூபாயும் இ எஸ் ஐ 16 ரூபாயும் பிடித்தம் செய்து உரிய அலுவலகத்திற்கு செலுத்தாமல் ஊழல் செய்தது தெரியவந்தது. அதை பதிவு செய்து இன்றைய தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் ஒவ்வொரு நபருக்கும் பிடித்தம் செய்த இ எஸ் ஐ ஈ பி எப் பணத்தை கம்பெனி பங்கும் சேர்த்து கணக்கில் ஒவ்வொரு துப்புரவு பணியாளருக்கும் கணக்கில் வரவைத்து தர வேண்டும்.

தவறும் பட்சத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும் என்று முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ராமன் கோ கம்பெனி இடம் கேட்டுக் கொண்டதற்கு ராமன் கோ நிறுவனம் அதன்படி ஒப்புக்கொண்டு பத்து நாட்களுக்குள் அனைத்து தொழிலாளர் இடத்தில் பிடித்தம் செய்த மேற்படி பணத்தை வரவைத்து தருகிறேன் என்று கலந்து கொண்ட நபர்களின் முன்னால் அனைவரும் கையொப்பமிட்டு இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பாக கலந்து கொண்ட மாநிலத் துணைச் செயலாளர் ந.ஜெகநாதன் அவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது அதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு அனைத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் பணிக்கு திருப்பினர்.

பத்து நாட்களுக்குள் இதை சரி செய்து தராவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கோரிக்கை வைக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.