• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தாய் இழந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார்! இவரது மகன் சிவகுமார் (34). பொங்காளியூர் பகுதியில், பானிபூரி கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்! இவரது தாய் அம்மா காளியம்மாள், கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்தார்!

தாய் இழந்த துக்கம் தாங்காமல் மிகுந்த மனவேதனையில் இருந்த சிவகுமார், இன்று அதிகாலை மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்! கோட்டூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. சம்பவம் குறித்து, கோட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.