ஆன்மிக குரு ஸ்ரீ நாராயண குருவின், 172 ஜெயந்தி விழா, மருத்துவமலை ஸ்ரீ நாராயண குரு தர்ம மடத்தில் நாளை ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை நடக்கிறது.
எய்ம்பா (அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்) சார்பில் நடத்தப்படும் நிகழ்வுக்கு, இம்பா தலைவர் டாக்டர் அருணாசலம் முதலியார் தலைமை வகிக்கிறார். அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார். பொது செயலாளர் ஆர்.எஸ்.கே.ரகுராம்
வரவேற்புரை ஆற்றுகிறார்.

காலை 8 மணிக்கு, ஸ்ரீ நாராயண குரு தர்ம மட தலைவர் ஸ்ரீமத் விசுதானந்த சுவாமிஜி, செயலாளர் அரூபானந்த சுவாமி வேள்வி பூஜைகளை துவக்கி வைக்கின்றனர். பின், ஸ்ரீநாராயண குருவிற்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப், ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் டிரஸ்ட் ஸ்ரீமத் சிவ ஸ்வரூபானந்த சுவாமி, எஸ்.என்.டி.பி., யூனியன் மணிகண்டன், எஸ்.என். ட்ரஸ்ட் நிர்மலன், ஸ்ரீ நாராயண குரு கல்வி மற்றும் பொதுசேவைகள் அறக்கட்டளை தலைவர் சிவசங்கரலிங்கம், தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவன், குரு தர்ம பிரச்சார சபா மாநிலத் தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கருத்துரை ஆற்றுகிறார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் இராமச்சந்திர குமார், இளங்கோவன், குழந்தைவேல் உட்பட மாநில, மண்டல, மாவட்ட, இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க பொருளாளர் ரவி முதலியார் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.




