மதுரை மேலூர் கீளவளவு பகுதியில் கடந்த 23 ஆம் தேதி செல்வம் என்ற பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு பட்டியலின இளைஞர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், உசிலம்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
ஆர்ப்பாட்டத்தின் போதே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது., தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சுரேந்திரக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.,




