• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மதுரை செல்லம்பட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்சம்..,

ByKalamegam Viswanathan

Aug 26, 2026

மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி பாண்டியராஜன் என்பவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த இடத்தைப் பதிவு செய்வதற்காக பாண்டியராஜன் செல்லம்பட்டி சார்-பதிவாளர் அலுவலகத்தை அணுகியபோது, அங்குள்ள அதிகாரிகள் பத்திரம் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

​ஆனால், சில நாட்களிலேயே அதே நிலத்தை எதிர்த்தரப்பைச் சேர்ந்த நபருக்கு அதிகாரிகள் பத்திரம் பதிவு செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பாண்டியராஜன், நேரடியாக பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த பெண் அதிகாரியை நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார். “பணம் வாங்கிக்கொண்டுதான் இந்த முறைகேடான பதிவைச் செய்தீர்களா?” என லஞ்சப் புகாரைச் சுமத்தி, அந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

​தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. இவ்விவகாரம் குறித்து பதிவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக உள்ளது

தற்போது பத்திரப்பதிவு அரசு அலுவலகத்திற்கு லஞ்சம் பெற்றதாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த தவெக நிர்வாகியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது