• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

குழந்தை இறப்பில் மர்மம்: உடலை தோண்டி எடுக்க முடிவு..,

ByS.Ariyanayagam

Aug 26, 2026

தாமரைப்பாடி அருகே குழந்தையின் இறப்பில் மர்மம் – குழந்தையின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியை அடுத்த சாலையூர் கிராமத்தில் திருமணமாகாத பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது. அப்பகுதியினர் குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வடமதுரை போலீசார் குழந்தை உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து ஆய்வு செய்தனர். மேலும் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக்குழு மூலம் உடற்கூறு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்

குழந்தையின் உடலை யாரும் அகற்றி விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.