• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓமைக்ரான் தடுப்பூசிக்கான வழிகாட்டும் நெறிமுறை

ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ஒன்றியம் முழுவதும் 2022 சனவரி 3 ஆம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

அதேபோல் 10 ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தடுப்பூசிகள் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது….

கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் 2 தவணைகளாகப் போட்டவர்களுக்கு அதே வகை தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்க்கும் பயன்படுத்தப்பட வேண்டும். 2 ஆவது தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்த பின் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

பூஸ்டர் தடுப்பூசி போடத் தகுதியானவர்கள் கோவின் கணக்கின் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலமாகவோ, அருகில் உள்ள சுகாதார நிலையங்களுக்கோ சென்று பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான தடுப்பூசியைப் பொறுத்தவரை 2007 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த 15 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கோவின் தளத்தில் கணக்கு தொடங்கி தடுப்பூசி செலுத்துவதற்கு பதிவு செய்ய வேண்டும். 15 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.