மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமற்றும் தாய் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானங்களில் எவர்கிரேட் ஹாக்கிங் கிளப் சார்பாக விளையாட்டுத் தந்தை எல். ராஜீ நினைவு 6 ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.

இதன் இறுதி போட்டியில்ராம்நாடு விளையாட்டு விடுதி அணியும், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் ராம்நாடு விளையாட்டு விடுதி அணி 2:0என்ற கோல் கணக்கில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை வென்று சாம்பியன் பெற்றது.திருநெல்வேலி விளையாட்டு அணி மூன்றாம் இடமும், அரியலூர் விளையாட்டுவிடுதி அணி நான்காம் இடமும் பெற்றது.இதன் பரிசளிப்பு விழாவிற்கு தாய் பள்ளி தாளாளர் எஸ்.வி.காந்தி தலைமை தாங்கினார்.
எவர்கிரேட் ஆக்கி அணி செயலாளர் மு.சிதம்பரம்,மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, வருவாய் ஆய்வாளர் திருப்பதி,ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்குஅயல்நாட்டு பயிற்சியாளர் வில்லியம் முரே பரிசு கள் வழங்கினார்.விழா ஏற்பாடுகளை எவர் கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, சரவணன்,சந்திரமோகன், தேவா, காளிதாஸ்ஆகியோர் செய்திருந்தனர்.முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பி ஜி ராஜா நன்றி கூறினார்.




