வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை,தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மழையில் நனைந்து வருவதை பார்த்த மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு அவர்களை மழைக்கான உடை ரெயின் கோர்ட் வழங்க முடிவுசெய்தார்.
உடனடியாக 50 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ரெயின் கோர்ட் வழங்கினார். இந்நிகழ்வில் காந்தி அருங்காட்சியகத்தின் தலைவர் நந்தாராவ், கல்வி குழுத் தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கடந்த 5 வருடமாக தினமும் மதிய உணவினை வழங்கி வரும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் இன்று மழையில் நனைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயின் கோர்ட் வழங்கியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாக அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லைபாலு தெரிவித்தார்.

ரெயின் கோர்ட் வாங்கிய சந்தோஷத்தில் உடனே அணிந்து கொண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த ரெயின் கோர்ட் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வரை நாங்கள் ரெயின் கோர்ட் அணித்ததும் இல்லை. யாரும் எங்களுக்கு ரெயின் கோர்ட் கொடுத்ததும் இல்லை என்றார்.




