திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் கட்டுமான பணிக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருச்சி உறையூரில் நிதி அளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட திக தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், அமைப்பு செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், திக ஐடி விங் தலைவர் வில்வம், மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, செந்தமிழினியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதாவது; ஒன்றிய அரசு சட்டப்படி நீட் தேர்வு நடத்த உரிமை இல்லை.

அரசியல் சட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு, அதுவும் மாநில உரிமையே தவிர வேறு இல்லை. ஒன்றிய அரசும் பல்கலைக்கழகங்களை தொடங்க முடியாது. நீட் தேர்வை எதிர்த்து எங்கள் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சாரம் அவர்களுக்காக இல்லை, எதிர்கால மாணவர் செல்வங்களுக்காக என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால் நீங்கள் சமூகநீதி வரலாற்றைப் பாருங்கள். புத்தியை கொள்முதல் செய்து கொள்ளுங்கள், உங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். சமூக நீதிக்கு எதிராக எது வந்தாலும் தமிழ்நாட்டில்ஆட்சி நீடிக்காது. நீட் தேர்வை ஒழிக்கின்ற வரையில் எங்களுக்கு வேறு வேலை இல்லை, செல்லக்கூடிய பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு மட்டுமே சொல்லக்கூடிய இந்த இரட்டை அளவுகோல் மோசடியை ஒழிக்கின்ற வரை எங்களுக்கு ஒய்வுமில்லை எனப் பேசினார்.




