மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறகளின்படி எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான மதுரை மேற்கு வட்டார அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தலைமையாசிரியர் ஷேக்நபி மைய ஒருங்கிணைப்பார்களாக செயல்பட்டார். பட்டதாரி அறிவியல் ஆசிரியர்கள் அல்ஹாஜ் முகமது மற்றும் ஜமீலா நடுவர்களாக செயல்பட்டனர். ஆசிரியர்கள் சார்லஸ் மற்றும் கிருத்திகா
கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
Indian Energy Basket 2047 Potential and challenges என்ற தலைப்பில் மாணவர்கள் 6 நிமிடம் தலைப்புடன் தொடர்புடைய கருத்துக்களை எடுத்துக்கூற வேண்டும், 2 நிமிடம் நடுவர்களின் கேள்வி பதில் நேரமாக இருக்கும், முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களை மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.
பள்ளி அளவில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து வட்டார அளவில் போட்டிகள் நடத்தி மாவட்ட அளவில் தேர்வாகும் இரு நபர்கள் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி தேசிய அறிவியல் மையம் புதுடில்லியில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்வர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவித்தலைமையாசிரியர் முகமது ரபி செய்திருந்தார்.




