• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே உரமூட்டைகள் பாதுகாக்கல்: சீல் வைப்பு..,

ByS.Ariyanayagam

Aug 21, 2026

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியாா் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல், செம்பட்டி, ஆதிலட்சுமிபுரம் அருகே மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் உரக் கடையிலிருந்து விவசாயத்துக்கான யூரியா உர மூட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலா்கள் அங்கு நேரில் சென்று உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைத்தனா்.

மேலும் மாட்டுத் தீவன நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேளாண்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.