• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நெக்ஸ்ட் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026: கோவையில் தகுதிச் சுற்றுப் போட்டி..,

BySeenu

Aug 20, 2026

நெக்ஸ்ட் ஃபேஸ் ஸ்கின் கேர் பை நேச்சுரல்ஸ் வழங்கும் ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026 போட்டியில் தகுதிச்சுற்று கோவையில் உள்ள அவினாசி சாலையில் அருகே உள்ள ட்ரன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு கல்லூரி, இருந்து மாணவ, மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே, மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் வெற்றிகரமாக தகுதிச்சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இந்த நகரங்களில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள், மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள். கோவையில் நடை பெறும் தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப் படுபவர்களும், அவர்களுடன் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இணைந்து, மாநிலப் பட்டத்திற்காகப் போட்டியிடுவார்கள்.

போட்டியில் பெண்கள் பிரிவுகளில் பிரவீனா பெண்களுக்கான பிரிவில் முதலிடமும், தேஜஸ்ஸ்ரீ, வன்சிகா ஆகியோர் 2,3 வது பிடித்தனர். திருமதி பேஸ் ஆப் கோயமுத்தூரில் அஸ்வினி சுசுந்தர் சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். ஆண்களுக்கான பிரிவில் சரண் முதலிடமும், சுகைல் அஸ்லம் 2ம் இடமும் பெற்றனர்.

மாநில இறுதிப் போட்டி சென்னை ஜி.ஆர்.டி ராடிசன் ஓட்டலில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐரிஸ் ஈவென்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லதா கிருஷ்ணா செய்திருந்தார். நிகழ்ச்சியில் நடுவர்களாக பேஸ் ஆப் கோயமுத்தூர் முன்னாள் வெற்றியாளர்கள் ஐரா, தனுஷ், மதுரை வெற்றியாளர் நிதின், நேச்சுரல்ஸ் பயிற்சியாளர் கோகிலா, டாக்டர் செந்தில் பிரியா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.