• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்ல ரெயில்வே துறை தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?

ByKalamegam Viswanathan

Aug 20, 2026

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் திறந்து செயல்படும் பட்சத்தில் போக்குவரத்து வசதிக்காக அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லக்கூடிய வகையில் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் முனையமாகுமா? என்றுசமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்

நிபந்தனைகள்
தமிழகத்தில்உலக தரம் வாய்ந்த உயர்தரசிகிச்சை கொண்டஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ் மருத்துவமனை)அமைய வேண்டும் என்று தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்றால் போக்குவரத்து வசதிக்காக 5 கி.மி. தொலையில் விமான நிலையம், ரெயில்வே நிலையம் மற்றும் நான்கு வழிச்சாலை அமைந்து இருக்க வேண்டும்.

தாழ்வான உயரத்தில் மின் வயர்கள் செல்ல கூடிய மின்கம்பங்கள் உள்ள பகுதியாக இருக்க கூடாது குறிப்பாக 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடவசதி மற்றும்குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரதுறை நிபந்தனைகளை விதித்தது. இந்த நிலையில் மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, புதுக்கோடை, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் மத்தியசுகாதார துறை உயர் அதிகாரிகள் நடத்தினர் இதில் மத்திய சுகாதார துறை எதிர் பார்த்த படி 200 ஏக்கர் இடம் வசதி குடிநீர் வசதி மற்றும் 5 கி.மீ. தொலைவில்விமான நிலையம், ரெயில்வே நிலையம் அமைந்த பகுதியாக மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சியில் பேச்சு இல்லா கிராமமானகோ. புதுப்பட்டி இருந்தது ஆகவே தோப்பூர் ஊராட்சி கோ புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது என்று மத்திய சுகாதாரதுறை முடிவு செய்தது. இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி அன்று மதுரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ 2021 கோடியில் கட்டுமான பணிகள்
கடந்த 2024 – ஆம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி முதல் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. 13.05 லட்சம் சதுர அடியில் மருத்துவக்கல்லூரி, நர்சிங் அகடாமி, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, உணவு கூடம் உள்ளிட 13 கட்டிடங்களை முதற்கட்டமாகவும், 10.26 லட்சம் சதுர அடியில் ஆயுஷ்மருத்துவமனை, வணிக வளாகம் குடியிருப்பு உள்ளிட்ட 16 கட்டிடங்கள் என்று பிரமாண்டமான சுமார் 6 மாடியுடன் கூடிய மொத்தம் 29 கட்டிடங்களை வருகின்ற 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணிக்கப்படடது.

இதில் முதற்கட்டமாக நிர்ணிக்கப்பட்ட கட்டமைப்புகள் 90 சதவீதம் பணி முடிந்ததாக கூறப்படுகிறது வருகின்ற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட சில கட்டமைப்புகள் திறக்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டால் முதலில் போக்கு வசதி மிகவும் அவசியமாகும்.

திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் முனையமாகுமா?
எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகும் இடத்தில் இருந்து 5.கி.மீ. தொலைவில் விமான நிலையம் மற்றும் ரெயில்வே நிலையம் அமைய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது அதன்படியே 5. கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் அமைந்து இருப்பது வரவேற்கதக்கது இதே சமயம் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் வழியாக செல்லக்கூடிய பெரும்பாலான எக்ஸ்பிரஸ் பயணிகள் திருப்பரங்குன்றத்தில் நின்று செல்லுவதில்லை. பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதுதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும்பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகஇருந்து வந்த போதிலும் நிறைவேறவில்லை.

இந்த நிலையில் எய்மஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில்கள் நின்று செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பாண்டியன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்துபுறப்பட்டு செல்ல கூடியவகையில்திருப்பரங்குன்றம் ரெயில் முனையமாக அமைய வேண்டும். அவ்வாறு செயல்படும் பட்சத்தில்கேரளா மற்றும் தமிழக முழுவதுமாக டாக்டர்கள், மாணவர்கள், நோயாளிகள் என்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்ல முடியும் இதை கருத்தில் கொண்டு மத்தியசுகாதாரத்துறை மற்றும் ரெயில்வே துறை தகுந்த நடவடிக்கைஎடுப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.