• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சேதமடைந்த தார்சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Aug 19, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி ஊராட்சியை சேர்ந்த கிராமம் சிவனாண்டி பட்டி. இந்த கிராமத்திலிருந்து தொம்பக்குளம் செல்லும் தார் சாலை போடப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.போதிய பராமரிப்பு பணி ஏதும் நடைபெறவில்லை.

தார்ச்சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் ராமன் பட்டி, கோடாங்கி பட்டி ,கிருஷ்ணாபுரம், தொம்பக்குளம்உள்ளிட் கிராம மக்கள் மாற்று பாதையில் சென்று வருகின்றனர். மருத்துவ சிகிச்சைக்காக ஆர்.ரெட்டியாபட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாமலும். பள்ளி, கல்லூரி, மாணவ ,மாணவிகள், சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழில் ஆகும். இதனால் விளைநிலங்களுக்கு இடு பொருட்களை கொண்டு செல்லவும், அறுவடை செய்த பயிர்கள் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் பட்டாசு ஆலைகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமபடுகின்றன. மேலும் தார் சாலை சீரமைக்கப்பட்டால் பி.திருவேங்கடபுரம், கொங்கன்குளம், கிராமத்தை சேர்ந்த மக்களும் பயனடைவார்கள். ஆகையால் சேதமடைந்த தார்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் சார்பில் புதிய தமிழகம் கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகுமலை கோரிக்கை விடுத்துள்ளனர்.