• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

‘வலிமை’ வேறு ஒருவருக்கான கதையா?

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன!

இது தொடர்பாக இப்படத்தின் இயக்குனர் வினோத் அளித்துள்ள பேட்டியில், ”வலிமை படப்பிடிப்பு மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கப்பட்டது! பின் கொரோனா பரவல் ஏற்பட்ட காரணத்தால்,படப்பிடிப்பின்போது பல இன்னல்கள் வந்தன! எனினும், எல்லாரும் விரும்பும் வகையில் ஒரு படத்தை எடுத்துள்ளோம் என்ற திருப்தி என்னிடம் உள்ளது!

‘வலிமை’ கதை வேறொரு நடிகருக்காக எழுதியது என்று நான் சொன்னதாக சில தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மை இல்லை. வலிமை கதையை நான் நீண்ட காலத்துக்கு முன்பே எழுதி விட்டேன், பின் அஜித் இந்த கதையில் நடிக்க வந்த பிறகு, அவருக்கு ஏற்றவாறு கதையில் மாற்றம் செய்தோம்” என்றார். அடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படம் அதிரடி சண்டை காட்சிகள் குறைவாகவும் வசனம் அதிகமாகவும் உள்ள படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார், இயக்குனர் வினோத்!