SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் H. சலாவுதீன் அவர்கள் தலைமையில் 04.08.2026 அன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் K. முகமது சாதிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாவட்ட அமைப்புப் பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்டப் பொருளாளர் ஜியாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரவிருக்கும் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் ஆகஸ்ட் 29, 2026 அன்று SDPI கட்சியின் தேசியத் தலைவர் மரியாதைக்குரிய M.K. பைசி அவர்கள் பங்கேற்கும் “தலைவர்கள் சந்திப்பு” நிகழ்ச்சி புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு, தேசியத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், செப்டம்பர் 12, 2026 அன்று சென்னையில் நடைபெறவுள்ள தலைமைச் செயலகம் நோக்கிய மாபெரும் பேரணியில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்கக் கோரியும், புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்திலிருந்து திரளான அளவில் பங்கேற்பது என செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
அதேபோல், செப்டம்பர் மாதத்தில் புதுக்கோட்டையில் SDPI கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி, அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடவும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக, மாவட்ட அமைப்புப் பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை ஆற்றியதுடன் கூட்டம் நிறைவுற்றது.





