விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் பட்டாசு மற்றும் சார்ந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பட்டாசு ஆலைகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் கீழ் பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டதால் பட்டாசு தொழில் நடத்த முடியாமல் பட்டாசு உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வின் காரணமாக நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலைகள் பட்டாசு உற்பத்தி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் வெம்பக்கோட்டை , தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களை நேரில் சந்தித்து தங்களது குறைகளையும் தற்போது நிலவும் சூழ்நிலையும் எடுத்துரைத்தனர்.
மேலும் ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி சீசன் தொடங்கும் நிலையில் இது போன்ற நிலை நீடித்தால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதுடன் பட்டாசு தொழிலில் உற்பத்தி பாதிக்கப்படும்.
இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும் என்பதை விளக்கி கூறியதை அடுத்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினரால் தடை செய்யப்பட்ட சுமார் 45க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
என்று தற்போது பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டதால் காலவரையற்ற தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவதாகவும் பட்டாசு பிரச்சினை தீர்த்து வைத்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா , தமிழக அரசிற்கும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்





