• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byதரணி

Aug 12, 2026

1. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது?
விடை: ஐந்து

    2. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர்?
    விடை: ஹென்றி ஆல்பர்ட்

    3. கம்பரை ஆதரித்த வள்ளல்?
    விடை: சடையப்ப வள்ளல்

    4. கம்பர் இயற்றிய மற்றொரு நூல்?
    விடை: சரசுவதி அந்தாதி

    5. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்?
    விடை: கவிஞர். துறைவன்

    6. ஆதார் அட்டையை முதலில் பெற்றவர் யார்?
    விடை: ரஞ்சனா சோனாவனே

    7. கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
    விடை: கோவலன் பொட்டல்

    8. மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை: சுவாமி விபுலானந்தா

      9. நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது?
      விடை: வலிநீக்கி

      10. இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது?
      விடை: பீல்ட் மார்ஷல்