• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் சார்பில் கல்வி ஊக்கவிப்பு விழா..,

ByS. SRIDHAR

Aug 9, 2026

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரகதாம்பாள் தியேட்டர் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை மாவட்ட அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் சார்பில் கல்வி ஊக்கவிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எம் கே செந்தில்குமார் ஏற்பாட்டில் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசுகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் விஜய் முகமது பர்வேஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அமைச்சருக்கு தேசிய தலைவர் செஞ்சி குமார் ஆச்சாரியார் தேசிய பொதுச்செயலாளர் மருதராஜ் கணேஷ் ஆகியோர் சால்வை அணிவித்து தங்களுடைய அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் கோரிக்கையாக மனுவை அளித்தனர்.

அதை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றி செய்கிறேன் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் அனைவரையும் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி மற்றும் மாவட்ட பொருளாளர் ஆனந்த் அனைவரையும் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் நிர்வாகிகள் பேசிய பொருளாளர் சிவக்குமார் மாநில கவுரவத் தலைவர் ரமேஷ் ஆச்சாரியார் மாநில தலைவர் ஜெகதீசன் மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் ஆச்சாரியார் மாநில துணை பொதுச்செயலாளர் சிவனேசன் மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணி மாநில இளைஞரணி செயலாளர் தணிகை மணி தஞ்சை மாவட்ட தலைவர் சண்முகம் அண்ணாதுரை மாவட்ட அவை தலைவர் ஜெகதீசன் ஆச்சாரியார் புதுக்கோட்டை சட்ட ஆலோசகர் ராம் சிங் இறுதி நண்டு உரையாக மாணிக்கம் மாநகரத் தலைவர் உரையாற்றினார் நிகழ்ச்சி நிறைவடைந்தது.