கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கோல்கத்தா ஆர் ஜி கார் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மருத்துவர் அபாய்யா படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவத்தை நினைவு கூர்ந்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் வன்முறை இல்லா மருத்துவச் சேவை தொடர வருடத்தோரும் விழப்புணர்வு பேரணி இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு புதுக்கோட்டை கிளையின் இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பு இணைந்து விழிப்புணர்வு பேரணி இன்று காலை 7.30 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு, புதுக்கோட்டை கிளை, இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டைகிளை,
மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பு புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியில் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சலீம், இந்திய மருத்துவ சங்கத்தை தலைவர் அனிதா தனசேகரன் தலைமையில் மருத்துவர்கள் ஜானகி ரவிக்குமார் , தனசேகரன் , சாரதா மணி, மாரிமுத்து, தில்லை மலர், ராம் பிரகாஷ், மலர்விழி, மதன் குமார், கோபாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி, வர்ஷா மற்றும் டீம் மருத்துவமனை மேலாளர் சக்திசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு வலியுறுத்தி புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவர்கள் கோஷங்கள் எழுப்பினர்…..





