• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட்கோட்ட பேரவை கூட்டம்..,

ByP.Thangapandi

Aug 7, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட் கோட்ட பேரவை கூட்டம் உட்கோட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது.,

இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கு ஊதிய மாற்றம் ரூ 5200, ரூ 20200 தர ஊதியம் ரூ 1900 வழங்க வேண்டும், சாலைப் பணியாளர் பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் உயர்நீத்தோரின் குடும்பத்திலிருந்து கருணை அடிப்படை பணி நியமனம் வேண்டி விண்ணப்பம் செய்தவருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.,

இதற்கு முன்னதாக கவணம்பட்டி சாலையிலிருந்து சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்து இயக்குனர் பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் பாடகி ஜானகி மறைவு உள்ளிட்ட 12 அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.,