• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் அறிவுடைய நம்பியின் ஐந்து நூல்கள் வெளியீடு..,

ByS.Ariyanayagam

Aug 3, 2026

திண்டுக்கல்லில் கவிஞர் அறிவுடைநம்பியின் வாழ்க்கை வரைந்த சித்திரம், இமை திறக்கும் பூக்கள், அவளுக்கும் அழகென்று பேர், மனம் கமலும் மல்லிகைப் பாக்கள்,ஓப்பில்லா அழகு ஆகிய ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா நடந்தது.
உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் மங்கையர்க்கரசி அனைவரையும் வரவேற்றார்.

ஜி.டி.என்.கல்வி குழுமத்தின் தலைவர் கே .ரத்தினம் நூலை வெளியிட திண்டுக்கல் எம்.பி .சச்சிதானந்தம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் தயாளன் ஆய்வுரை வழங்கினார். திண்டுக்கல் செவாலியர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருள் தந்தை சேசு ஆரோக்கியம், தமிழக ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ், திராவிட கழக மாவட்ட தலைவர் வீரபாண்டி,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பத்திரிக்கையாளர் அரியநாயகம் அறிமுக உரையாற்றினார்.

தலைமை ஆசிரியர் பஞ்சவர்ணம், திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாண்டித்துரை, இலக்கியச் சாரல் அமைப்பாளர் குழந்தை, கவிஞர் அசோக்குமார் உட்பட பலருக்கு நூல் வழங்கப்பட்டது. கவிஞர் எழில்அமுது நன்றி கூறினார். கவிஞர் வெண்ணிலா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இதில் ஜி. டி என். கல்வி குழுமத்தின் தலைவர் கே. ரத்தினம் பேசியதாவது:
கவிஞர்கள் காலத்துக்குத் தகுந்த மாதிரி கவிதை வடித்து வருகிறார்கள். அந்த வகையில் காதல் கவிதையில் இருந்து பொதுவுடைமை பகுத்தறிவு உட்பட
பல கவிதைகளை கவிஞர் அறிவுடை நம்பி படைத்துள்ளார். சிறுகதைகள் பல எழுதி உள்ளார். அதில் இன்னும் சில விஷயங்களை காலத்துக்கு தகுந்த மாதிரி புகுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். பல நூல்களை அவர் தொடர்ந்து எழுத வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திண்டுக்கல் எம்.பி.சச்சிதானந்தம் பேசும்போது:
நான் கல்லூரியில் படிக்கும்போது பஸ்சில் எனக்கு சீட்டு போட்டு வந்தவர் கவிஞர் அறிவுடை நம்பி. அந்தக் காலத்தில் தீண்டாமை ஒழித்த முதல் கிராமம் அவருடைய கிராமம் தான். அந்த பாதிப்புகளை அவருடைய கவிதை நூல்களில் நான் பார்த்தேன். பல புரட்சியான கருத்துக்களை அவர் சொல்லி உள்ளது வாழ்த்துக்கு உரியது.
பல அனுபவங்கள் அவருக்கு உண்டு என்பதால் தொடர்ந்து அவர் எழுத வேண்டும். தமிழ் தாய் வாழ்த்து பாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கையெழுத்திட்டால் அந்தப் பாடலை பாட முடியாமல் நிலை ஏற்படும். பார்லிமென்டில் தற்போது பேச முடியவில்லை. அவர்களாக குரல் வாக்ககெடுப்பில் பலவற்றையும் நிறைவேற்றி விடுகிறார்கள். இந்த நிலை என்றும் மாறும் என்று தெரியவில்லை என்றார். கவிஞர் அறிவுடை நம்பி ஏற்புரை வழங்கினார்.