• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் ..,

ByP.Thangapandi

Aug 1, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.விஜய்., வெற்றி பெற்றதையொட்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், பொதுமக்களின் குறைகளை கேட்கவும் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்தும், பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார்.,

இந் நிகழ்வுகளுக்கு செல்லும் போது சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதுடன், முன்விரோதம் மற்றும் அரசியல் கால்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்குடன் சூழ்ச்சிகள் நடப்பதாக தகவல் கிடைத்தாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் தனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனை நேரில் சந்தித்து தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்க கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் கோரிக்கை மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,