• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பழிக்கு பழியாக நடந்த கொலையில் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை..,

ByKalamegam Viswanathan

Aug 1, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில் முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டாகத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து வெட்டியதில் சஞ்சய் குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதற்கிடையே காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் முக்தீஸ்வரன் சரவண பெருமாள் ஆகிய மூன்று பேர் ஆயுதங்களுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் மூன்று பேரிடமும் மாவட்ட போலீஸ் எஸ் பி தேவநாதன் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஏற்கனவே முள்ளி ப்பள்ளம் கிராமத்தில் நடந்த கொலைக்குபழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொலை வழக்கில் தென்கரை கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற டைரி அதே தென்கரை கிராமத்தை சேர்ந்த ஊமை என்ற கார்த்திக் நாகமலை புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோறு என்ற சதீஷ்குமார் ஆகிய மூவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆறு நபர்களிடமும் போலீசார் மேலும் திவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளார்களா? வேறு ஏதும் காரணமா என மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.