• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கேட்டு உறவினர்கள் மறியல்..,

ByS.Ariyanayagam

Aug 1, 2026

கொலைசெய்யப்பட்ட அருந்ததிய இளைஞர் ராமருக்கு நீதி கேட்டு
உடலை வாங்க மறுத்து திண்டுக்கல்லில் மறியல் போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானல் பூம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட அருந்ததிய இளைஞர் ராமர் கொலைக்கு நீதி கோரி உடலை வாங்க மறுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு தலைவர்கள் முத்துராணி கே.டி .கலைச்செல்வன் ஆர் வனஜா மாதர் சங்க மாவட்ட தலைவர்கள் பாக்கியம் பாப்பாத்தி ஜீவா நந்தினி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய் கோஸ் மாநகர செயலாளர் அரபு முகமது, மாவட்ட குழு உறுப்பினர் கே எஸ் கணேசன் இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் நிரூபன் தீபக் ராஜ் மற்றும் தமிழர் சமூக நீதிக் கழகத்தின் தலைவர்கள் சுரா தங்கபாண்டியன் ,சரவணவேல், மலையாள ராஜா ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கொலை செய்யப்பட்ட ராமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.