• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தாதம்பட்டியில்பாலம்மாள் எல்லம்மாள் சிங்காரம்மாள் கோயில்களரி திருவிழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகர் அருள்மிகு பாலம்மாள், எல்லம் மாள், சிங்காரம்மாள் கோவில் களரி திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 10:30 மணிக் கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் தொடங்கியது.

மாலை 6 மணிக்கு குலதெய்வங்களின் பெட்டிகளுக்கு பூஜை செய்யப்பட்டது. இரவு 7:35 மணிக்கு குலதெய்வங்களின் பெட்டிகளை சாமியாடிகளுடன் ஊர்வலமாக அழைத்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இரவு 9 மணிக்கு கரகம் ஜோடிக்கப்பட்டது முளைப்பாரியுடன் அழைத்து வரப்பட்டது.10:30 மணிக்கு குலதெய்வங்களுக்கு மாவிளக்கு எடுக்கப்பட்டது .11:30 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு குல தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு திருவி ளக்கு பூஜையு ம்,6மணிக்கு பௌர் ணமி பூஜையும் 6 30 மணிக்கு முளைப் பாரி வைத்து கும்மி அடித்தல் நிகழ்ச்சி யும் 7 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மூன்றாம் நாள் காலை 7:30 மணிக்கு முளைப்பாரி கரைக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. இதன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர், களரி திருவிழா குழுவினர், ஆலோசனை குழுவினர், பூசாரி கள் மற்றும் சாமியாடிகள் செய்திருந்தனர்.