• Thu. Jul 30th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

லாக்கப் டெத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை..,

ByKalamegam Viswanathan

Jul 30, 2026

விஜய் தலைமையிலான த‌வெ.கஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து
இதுவரை நாகர்கோவில் சிறையில் சபரி வருமன், புழல் சிறையிலே பாலாஜி, சென்னையில் ஓட்டுனர் வெங்கடேசன்,தூத்துக்குடியில் அருணாச்சலம் காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு விஜய் பேசியபோது
ஒரு மாவீரன் நெப்போலியன் நமக்கு கிடைத்து விட்டார் என்று ஜென்சி தலைமுறை நினைத்தனர்.அந்த வீர வசனங்களில் எங்களுக்கு சாரி வேண்டாம் எங்களுக்கு நீதி தான் வேண்டும் என்று சொன்ன மாவீரன் நெப்போலியன் விஜய் இப்போது மறைந்து விட்டாரா அல்லது தலைமறைவாகி விட்டாரா என்ன காரணம் என்று தெரியவில்லையே ஏன் வாய் திறக்க மறுக்கிறாய் விளக்கம் சொல்ல முன் வருவாரா விஜய்?

மாற்ற வேண்டும் என்று கேட்ட மக்களுக்கு அதிரடி பரிசாக டாஸ்மாக் மதுபான கடைகளை தனியார் மயமாக்குகின்ற மாற்றம் .இதனால் இனி தமிழ்நாடு மதுவிலே மிதக்கும் தண்ணீர் நாடாக வரலாறு படைக்கும் மீண்டும் தனியார் மயம் இது கின்னஸ் சாதனை இல்லையா? இதற்குத்தானா விஜய்க்கு மக்கள் வாக்களித்தார்களா.

முயற்சி செய்து கிடைத்த தோல்வியும், முயற்சியே செய்யாமல் கிடைத்த வெற்றியும் வாழ்வின் நிரந்தரம் அல்ல. இன்றைக்கு தமிழ் இனத்திற்காகவும், மண்ணுக்காகவும் எதுவும் செய்யாமல் ஒரு சொம்பு தண்ணீரை கூட ஊற்றாமல், மக்களிடம் மூளை சலவை செய்து ஏமாற்றம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஆட்சி அரியணை
என்றால் இது என்ன ஜனநாயகம்!

நல்ல அரசாட்சியை நாடு எதிர்பார்த்து காத்திருக்கிறது நல்லாட்சி என்றால் என்னவென்று விஜய்க்கு தெரியாது. விஜய்யை புகந்து பாடுகின்ற புலவர்களுக்கு மட்டும் பஞ்சமில்லை. புகழ்ந்து பாடுகின்ற புலவர்களுக்கு சன்மானம் தவறாமல் போய்விடுகிறதா.

இன்றைக்கு இந்த லாக்கப்டெத் மரணங்களுக்கு என்ன பதில் சொல்வார்? பொறுப்பேற்று மனுநீதிச் சோழரை போல தன் பதவியை விட்டு துறப்பாரா,

மதுபான விற்பனை முறைகேட்டை என்னால் தடுக்க முடியல்லை என்று தனியார் மயம் ஆகியுள்ளார் என்ன புத்திசாலித்தனம். 717 கடைகளை நாங்கள் பூட்டுகிறோம் என்று அரசாணை வெளியிட்டு மக்களை ஏன் ஏமாற்றினார்கள்.இப்போது முறைகேட்டை தவிர்க்க முடியவில்லை என்று தனியார் மயம் என்று நியாயம் கற்பிக்கிறார்கள் லாக்கப் டெத் மரணம் இன்றைக்கு தடுக்க முடியவில்லை என்று காவல்துறை தனியார்மயம் ஆக்கி விடுவார்களா ?

இன்றைக்கு அரசு சேவையை இன்றைக்கு உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிற வகையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் காலத்திலே கல்விக்கான கட்டமைப்பு, 69 சதவீத இட ஒதுக்கீடு, 7.5 சதவீதம் உள இட ஒதுக்கீடு, மக்கள் நல்வாழ் துறையில் கட்டமைப்பு ,போக்குவரத்து துறை கட்டமைப்புகளை இப்படி சேவை மனப்பான்மையோடு 54 ஆண்டுகள் மேல் அந்த கட்டமைப்பை ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி உழைத்து ,தங்களை அர்ப்பணித்து தியாகம் செய்துதான் இந்த கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்.

இன்றைக்கு அரசு ஆஸ்பத்திரியில் முறைகேடுகளை தடுக்க முடியவில்லை என்றால் தனியார் மயம் வாங்கி விடுவார்களா, முறைகேட்டை தடுக்க முடியவில்லை என்றால் போக்குவரத்து துறை தனியார் மயம் ஆகிவிடுவார்களா ? கல்வித்துறையை முறைகேட்டை தடுக்க முடியவில்லை என்றால் தனியார் மயம் ஆக்கி விடுவார்களா எங்கே தமிழகம் போகிறது .

த.வெ.க.அரசின் தடுமாற்றத்தை பார்க்கிற போது ,இந்த அரசு இன்னும் எத்தனை நாளைக்கு என்பதுதான் இந்த மக்களிடத்தில் கேள்வி எழுந்துள்ளது .அனுபமில்லாத அரசு, ஆற்றல் இல்லாத அரசு, அரைவேக்கட்டுத்தனமாக அரசு, இன்னும் எத்தனை இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைப்பார் என்று பார்ப்போம் என கூறினார்.