• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வந்த காட்டு யானை..!

BySeenu

Jul 29, 2026

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. அது மட்டும் இன்றி தோட்டங்களிலும் தோட்டத்து வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கால்நடை தீவனங்களையும் தின்று செல்கிறது.

இந்த நிலையில் கடந்த சில இரண்டு மூன்று தினங்களாக பெரிய தடாகம், அனுவாவி சுப்ரமணிய கோவில் சுற்று பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்து வருவதால் பக்தர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை பெரிய தடாகம்- குட்டைவழி செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்று கால்நடை தீவனங்களை தேடிச் சென்றுள்ளது. தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் ஒற்றைக் காட்டு யானை வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று மீண்டும் அதே கேட் வழியே வெளியேறியது பதிவாகி உள்ளது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன