தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்றது.

கிளை தலைவர் அங்கம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசுப்பு ராஜ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் பாஸ்கரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலகுரு பேசியது

காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். உச்சவரம் இன்றி செலவு தொகையை முழுவதும் வழங்க வேண்டும், அங்கீகரிக்கப்படாத நோய் மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை என்ற பாகுபாடு களைய வேண்டும் மருத்துவமனைகள் முன் தொகை வசூல் செய்வதை தடுக்க வேண்டும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனையில் இத்திட்டத்திற்கான சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் துவங்க வேண்டும், மாதாந்திர சந்தா தொகை பிடித்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைத் தலைவர் ரவீந்திரன் நன்றி கூறினார்.




