• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி..,

ByRadhakrishnan Thangaraj

Jul 29, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் பீடர் சாலையில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் கலந்து கொண்ட மனித சங்கிலி மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்க புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி நிகழ்ச்சியை ஸ்ரீவில்லிபுத்தூர் மோகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தின் மாவட்ட துணை இயக்குனர் ரவி மீனா மற்றும்
மாவட்ட சார் ஆட்சியர் முகமது இர்வான் தலைமையில் இராஜபாளையம் வனச்சரகர் அலுவலர் அன்பரசி ஸ்ரீவில்லிபுத்தூர் வனசரக அலுவலர் சக்திவேல் சாத்தூர் வனச்சரக அலுவலர் கார்த்திக் வணவர்கள் செல்வராஜ் கனகராஜ் விக்னேஷ் பெரியசாமி மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.